ADDED : ஏப் 26, 2024 12:11 AM
அ நிறம் | அளவு
கூடலுார்;கூடலுார் புலம்பட்டி அருகே, பழங்குடி மாற்றுத்திறனாளி முதியவருக்கு, புளு மவுண்டன் ரோட்டரி கிளப் சார்பில் சர்க்கர நாற்காலி வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி புலம்பட்டி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் சங்க தலைவர் எல்ஜுதாமஸ், கால்களை இழந்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு சர்க்கர நாற்காலியை வழங்கினார். தேவர்சோலை பேரூராட்சி துணைத் தலைவர் யுனுஸ்பாபு, கிளப்பின் நிர்வாக செயலாளர் அனுஷினன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
