/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் சிக்கி பலியான அர்ச்சகர் குடும்பத்தினருக்கு நண்பர்கள் உதவி கரம்

ADDED : ஆக 12, 2024 02:17 AM

பந்தலுார்;வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான நீலகிரியை சேர்ந்த கோவில் அர்ச்சகரின் குடும்பத்தினருக்கு நண்பர்கள் உதவி கரம் நீட்டி ஆறுதல் கூறினர்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார். இவர் கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை சிவன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். கடந்த, 30 ஆம் தேதி அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினருக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்யாணகுமாருடன், படித்த சக நண்பர்கள் இணைந்து உதவி செய்ய முடிவு செய்தனர்.
அவர்கள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திரட்டி, அதனை நேற்று கல்யாணகுமாரின் மனைவி மஞ்சுளா மற்றும் குடும்பத்தாரிடம் வழங்கினர். மேலும், கல்யாணகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், குழந்தைகள் படிக்க அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளதாகவும் உறுதி அளித்தனர்.
போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் திருக்கேஸ்வரன், மனோகரன், ரவி; அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் ராஜேந்திரன், உதயசூரியன் மற்றும் செல்வரத்தினம், பாரத ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.