sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

/

குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

1


ADDED : ஜூலை 31, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:59 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் நகர மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர் உஸ்மான்: நகரில் நாள்தோறும், 17 டன் குப்பை அகற்றப்படுவதாக கூறுகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை. ஒப்பந்ததாரர் விதி மீறி செயல்படுவதால், குப்பை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்: அதிகாரியிடம் பேசி முடிவு செய்யப்படும்.

துணைத் தலைவர் சிவராஜ்: இப்பிரச்னையை தொடர்ந்து பேசுகின்றனர். அனைவரும் ஒத்துழைத்து கையெழுதிட்டு, தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

இளங்கோ: நகரில் அகற்றப்படும் குப்பையின் எடையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அனுப்கான்: இது தொடர்பாக ஆய்வு செய்ய தலைவர் அமைத்த கமிட்டி, தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்: ஆதாரம் கொடுக்க வேண்டும்.

சத்தியசீலன்: ஆதாரம் உள்ளது. நெல்லியாளம் நகராட்சியின் குப்பையை இங்கு எடுத்து வருகின்றனர்.

ராஜேந்திரன்: விசாரணை செய்யும்போது ஆதாரம் தரப்படும். எனவே முதல் கட்டமாக ஒப்பந்தம் ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

வென்னிலா: ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கும் போது மன்ற கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us