/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரும்புபாலம் அருகே சாலையோர வனத்தில் வீசப்படும் குப்பைகள் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்

ADDED : ஆக 10, 2024 01:48 AM

கூடலுார்;கூடலுார் இரும்புபாலம் அருகே சாலையோர வனத்தில் கொட்டப்படும் குப்பைகளால், பாண்டியார்--புன்னம்புழா ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடலுார் கோழிக்கொடு சாலை, இரும்புபாலம் வழியாக, பாண்டியார் - புன்னம்புழா ஆறு செல்கிறது. ஆற்றின் கரை பகுதியில் பசுமை வனப்பகுதி உள்ளது.
இப்பகுதியில், வனச் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்று நீரை மாசுப்படுவதை தடுக்க குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோர வனத்தில் வீசி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழியாக பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தாங்கள் எடுத்து வரும் உணவை, சாலையோர தடுப்பில் அமர்ந்து உட்கொண்ட பின், அதன் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அப்பகுதியில் வீசி செல்கின்றனர்.
இதனால், வனச்சூழல் பாதிக்கப்படுவதுடன், ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், குப்பையில் உணவு தேடி வரும் வன உயிரினங்கள், சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் உணவுடன், பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆற்றை ஒட்டிய வனப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும்; மீண்டும், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் வனத்துறை எடுக்க வேண்டும்,' என்றனர்.