/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரும்பாலம் நீரோடையில் குப்பை; மாசடையும் தண்ணீரால் பாதிப்பு
/
கரும்பாலம் நீரோடையில் குப்பை; மாசடையும் தண்ணீரால் பாதிப்பு
கரும்பாலம் நீரோடையில் குப்பை; மாசடையும் தண்ணீரால் பாதிப்பு
கரும்பாலம் நீரோடையில் குப்பை; மாசடையும் தண்ணீரால் பாதிப்பு
ADDED : மார் 06, 2025 09:36 PM

கோத்தகிரி; கோத்தகிரி டானிங்டன் பகுதியில், கரும்பாலம் ஓடை தண்ணீரை, கடந்த காலங்களில் பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். காமராஜர் சதுக்கம் சதுப்பு நிலம் மற்றும் லாங்வுட் சோலையில் இருந்து வெளியேறும் ஓடை தண்ணீர் சமீப காலமாக வறண்டு வருகிறது.
இதற்கு காரணம், கோத்தகிரி பகுதியில் அன்றாடம் வெளியேறும் கட்டுமான கழிவுகள் உட்பட, பலதரப்பட்ட கழிவுகள் ஓடையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், ஓடையின் ஆழமும், அகலமும் வெகுவாக சுருங்கி வருகிறது.
தவிர, காட்டு செடிகள் ஆக்கிரமித்து, ஓடை இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் காட்சி அளிக்கிறது. 'ஓடை உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு இல்லாமல், பாதுகாக்கப்பட வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், ஓடையை துார்வாரி பாதுகாப்பதுடன், விதி மீறி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.