/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு இடையூறு
/
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு இடையூறு
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு இடையூறு
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஆக 19, 2024 01:39 AM
கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜார் சாலையில், கூட்டமாக உலா வரும் ஆடுகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜார் பகுதி நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளது.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், அரசு பஸ்கள் உட்பட, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வணிக வளாகங்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சமீப நாட்களாக ஆடுகள் சாலையில் உலா வருவது தொடர்கிறது. பெரும்பாலான நேரங்களில் அவை கூட்டமாக சாலையில் படுத்து விடுவதால், வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகனங்களால், ஆடுகளுக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.