/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

ADDED : செப் 09, 2024 09:52 AM

கூடலுார் : கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்ட் கோழிக்கோடு சாலையில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து, பந்தலுார் மற்றும் கேரள வயநாடு, மலப்புரம் பகுதிகளுக்கு இடையே, தமிழக மற்றும் கேரள அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. கூடலூரில் இருந்து புறப்படும், அரசு பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், கோழிக்கோடு சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியில், அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க சாலையோரம் ஒதுக்கப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசு பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்டுகிறது.
சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறினர்.