/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கூடலுாரில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலுாரில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலுாரில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 09:43 PM

கூடலுார்:
கூடலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்த சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள், 75 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர், 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட, 57,500 ரூபாய் சம்பளம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில், கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.