/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு மருத்துவமனை சாலை கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
/
அரசு மருத்துவமனை சாலை கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:16 PM
ஊட்டி : ஊட்டி ஸ்டேட் பாங்க்- அரசு மருத்துமனை சாலையில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் ஓடுவதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழை பெய்யும் போது, கழிவு நீர் சாலையில் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ஊட்டி ஸ்டேட் பாங்க்- அரசு மருத்துமனை சாலையில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் ஓடுவதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர், நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலையில் நாள்தோறும், மாணவர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்; நோயாளிகள் பலர் செல்கின்றனர். இவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.