/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித கழிவு கலந்த குடிநீர் தொட்டி அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு
/
மனித கழிவு கலந்த குடிநீர் தொட்டி அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு
மனித கழிவு கலந்த குடிநீர் தொட்டி அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு
மனித கழிவு கலந்த குடிநீர் தொட்டி அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 03, 2024 02:21 AM
கோத்தகிரி;கோத்தகிரி கோடநாடு கெராடாமட்டம் பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்துள்ளனர்.
இது குறித்து, பிரியா காலனி கிராம தலைவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன், மாவட்ட கலெக்டரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், 'அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, உத்தரவிட்டார். அதன்படி, குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், டி.எஸ்.பி., குமார் மற்றும் கோத்தகிரி தாசில்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை செய்தனர். அங்கு,'கிணறு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்திற்கு யாரும் செல்லாதவாறு சுற்றிலும் வேலி அமைக்கவும், கோடநாடு ஊராட்சி மூலம் நாள்தோறும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும்,' உத்தரவிட்டனர். அரசு அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கையால், பிரியா காலனியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மக்கள் ஆறுதல் அடைந்தனர்.