/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகளின்றி அழகர் மலை மக்கள் அவதி; ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்

ADDED : மே 23, 2024 11:50 PM

ஊட்டி;ஊட்டி அழகர் மலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்மலை கிராமத்தில், 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பெரும்பாலானோர், கூலி வேலைக்கு சென்று குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.
கிராமத்தில், தண்ணீர், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. 'செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு, நடைபாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில், மக்கள் பயன்படுத்தி வந்த ஒற்றையடி மண் பாதை சரிந்து விழுந்துள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் வழுக்கி விழுந்து வந்தனர்.
இந்நிலையில், இறந்தவர் உடலை எடுத்து செல்ல பாதை வசதி இல்லாததால், உடலை, மூங்கில் தொட்டில் கட்டி, மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கிராமத்தின் அவல நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று கிராம மக்களின் குறைகளை கேட்டு, அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.