/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை புலிகள் காப்பகம்; பார்வையிட்ட கவர்னர் ரவி
/
முதுமலை புலிகள் காப்பகம்; பார்வையிட்ட கவர்னர் ரவி
ADDED : ஏப் 01, 2024 01:31 AM

கூடலுார்:முதுமலைக்கு வந்த கவர்னர் ரவி, வனப்பகுதிக்குள் சவாரி சென்றுவிட்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுத்து பராமரிப்பதை பார்வையிட்டார்.
தமிழக கவர்னர் ரவி, ஐந்து நாள் பயணமாக, நேற்று முன்தினம் மாலை ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். நேற்று மதியம் முதுமலை வந்து, வனத்துறை வாகனத்தில் வனப்பகுதியில் சவாரி சென்றார்.
சவாரி முடித்து, மாலை, 5:45 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து, 6:15 மணிக்கு வளர்ப்பு யானைகள் உணவு வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வந்த கவர்னர், யானைகளுக்கு உணவு வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த யானைகளுக்கு, பாகன்கள் உணவு கொடுப்பதை பார்வையிட்டு, அவைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
'ஆஸ்கார்' ஆவண படத்தில் இடம் பெற்ற யானை பாகன் பொம்மனை அழைத்து பேசினார். அப்போது, முதுமலை துணை இயக்குனர் வித்யா உட்பட சிலர் உடனிருந்தனர். தொடர்ந்து, மசினகுடி வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றார்.

