/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
/
அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஜூலை 27, 2024 02:01 AM
மேட்டுப்பாளையம்;பாலியல் தொந்தரவு செய்த, அரசு பள்ளி பாட்டு ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
காரமடை அருகே நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 53. இவர் அரசு பள்ளி ஒன்றில் பாட்டு ஆசிரியராக பணிபுரிகிறார். பத்மநாபன் பணிபுரிந்து வரும் பள்ளியில், படித்து வந்த சில மாணவிகளுக்கு, பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தனர். உடனடியாக, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விரைந்து வந்து, நேற்று முன் தினம் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பாட்டு ஆசிரியர் பத்மநாபன் மாணவிகளுக்கு, பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா, தலைமையிலான போலீசார், வழக்கு பதிந்து பத்மநாபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
----