/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நான்கு தலைமுறை கண்ட மூதாட்டி: 100 வது பிறந்த நாளில் கோலாகலம் இவரின் உணவு ரகசியம் தானிய வகைகள்

ADDED : மே 05, 2024 11:40 PM

கோத்தகிரி:கோத்தகிரி அருகே மூதாட்டிக்கு, 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி ஒரசோலை கிராமத்தை சேர்ந்த மருந்தாளர் நஞ்சாகவுடர். இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மனைவி தேவியம்மாள்,100.
இந்த தம்பதியினருக்கு, நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
நான்கு தலைமுறையை கண்டு, மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி தேவிக்கு நேற்று, 100வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அதில், மூதாட்டியின் பேரன், பேத்திகள், எள்ளு பேரன் வரை, குடும்பத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒரசோலை, நட்டக்கல் மற்றும் அண்ணோடை கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மூதாட்டியிடம் ஆசி பெற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
மூதாட்டி தேவி கூறுகையில், ''இன்றுவரை எனது அன்றாட பணிகளுக்கு யாரையும் எதிர்பார்ப்பதில்லை. நான்கு தலைமுறையை கண்டுள்ளேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. எனது உணவு பழக்கத்தில், கூடுமானவரை, பாரம்பரிய தானிய வகைகள் இருக்கும். சைவ உணவு பிடிக்கும்.
இதுவரை, ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் எனக்கு வரவில்லை. நான் மருத்துவமனைக்கு சென்றதில்லை.
அனைவரும், நோய் நொடி, சண்டை இல்லாமல் வாழ வேண்டும் என்பது எனது பிரார்த்தனை,'' என்றார்.