/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 'கிரீன் சாம்பியன்' விருது
/
சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 'கிரீன் சாம்பியன்' விருது
சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 'கிரீன் சாம்பியன்' விருது
சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 'கிரீன் சாம்பியன்' விருது
ADDED : ஆக 15, 2024 11:16 PM

கோத்தகிரி : கோத்தகிரியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு பசுமை விருது வழங்கப்பட்டது.
மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பாக,'கிரீன் சாம்பியன் அவார்ட்' என்ற விருது, கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஆசிரியர் ராஜூவுக்கு வழங்கப்பட்டது.
இவர், கடந்த, 27 ஆண்டுகளுக்கு மேலாக லாங்வுட் சோலையில் மரம் நடுதல், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வனவளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தவிர, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வானவில் மன்றத்தின் மாநில கருத்தாளராகவும் இருந்து வருகிறார். கடந்த இரு ஆண்டுகளில், 60 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இடையே, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
இவருக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.

