/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு ரூ.16.04 விலை நிர்ணயம்
/
பசுந்தேயிலைக்கு ரூ.16.04 விலை நிர்ணயம்
ADDED : ஏப் 02, 2024 10:32 PM
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை, கிலோவுக்கு, 16.04 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
குன்னுார் தேயிலை ஏல மையம் மற்றும் 'இன்கோ சர்வ்' மையத்தில் வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது. தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், மார்ச் மாத ஏலத்தின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கான விலையை குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது. தேயிலை 'பிரிவு 30ஏ5 (ஏ)' உத்தரவின் படி, மார்கெட்டிங் கட்டுப்பாடு, 2வது திருத்தம் அடிப்படையில், மார்ச் மாதத்திற்கான பசுந்தேயிலை, கிலோ, 16.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
'கடந்த நவ., மாதம், 15.40, ரூபாய்; டிச., மாதம் 15.34; ஜன., மாதம் 15.04 ரூபாய்; பிப். மாதம், 14.92 ரூபாய்,' என, இருந்தது குறிப்பிடத்தக்கது.

