/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறை தீர்ப்பு கூட்டம்; 227 கோரிக்கை மனுக்கள்
/
குறை தீர்ப்பு கூட்டம்; 227 கோரிக்கை மனுக்கள்
ADDED : ஆக 20, 2024 10:06 PM
ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில், 227 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். அதில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தொழிற்சங்க, மாவட்ட தலைவர் சிவா கலெக்டரிடம் அளித்த மனு:
குன்னுார், கோத்தகிரி பகுதியில் பல்வேறு தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அதில், எங்கள் சங்கத்தை சேர்ந்த பலர், 4 வது தலைமுறையாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் வீடுகள், 80 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் அந்த வீடுகளை சரி செய்து தரவில்லை. குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் சூழ்ந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

