/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறை கேட்பு கூட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
குறை கேட்பு கூட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 26, 2024 01:05 AM
அன்னுார்:கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில், சுழற்சி முறையில், மாதம் ஒரு கோட்டத்தில் விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த மாதம், கோவை வடக்கு வருவாய் கோட்டத்தில் உள்ள அன்னுார், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகளுக்காக, கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும், 27ம் தேதி காலை 11:00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையில் நடைபெறுகிறது.
'முகாமில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை, மின்வாரியம், கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, அரசு போக்குவரத்து கழகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்,' என அறிக்கையில் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

