/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு செயல் முதலீடுக்கு பயன் குன்னுாரில் 'உபாசி' தகவல்
/
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு செயல் முதலீடுக்கு பயன் குன்னுாரில் 'உபாசி' தகவல்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு செயல் முதலீடுக்கு பயன் குன்னுாரில் 'உபாசி' தகவல்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு செயல் முதலீடுக்கு பயன் குன்னுாரில் 'உபாசி' தகவல்
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
குன்னுார்:'மதிப்பு கூட்டப்பட்ட வரி ஒரு சதவீதத்திலிருந்து, 0.1 சதவீதமாக குறைக்கப்பட்டது மின் ஏல மையங்களுக்கும் பொருந்தும் என்பதால் தேயிலை தொழிலில் செயல் முதலீடு குறையும்,'என, உபாசி அறிவித்துள்ளது.
குன்னுாரில் தென்னிந்திய தேயிலை தோட்ட சங்க (உபாசி) செயல்பட்டு வருகிறது. உபாசி சார்பில் பல்வேறு கோரிக்கைகள் செயல்படுத்த, மத்திய அரசுக்கு கேட்கப்பட்டிருந்தது. தற்போதைய பட்ஜெட் அறிவிப்பில் பல கோரிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, தென் மாநில தோட்ட தொழிலுக்கு அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் ஜி.எஸ்.டி., எனும் மதிப்பு கூட்டப்பட்ட வரி குறைக்கப்பட்டது, தேயிலை தொழிலுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் சஞ்சித் கூறியதாவது:
தென்னிந்திய தோட்ட தொழிலுக்கு என தனியாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இணைய வர்த்தகத்தில் டி.டி.எஸ்., எனும் மதிப்பு கூட்டப்பட்ட வரி ஒரு சதவீதத்திலிருந்து, 0.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது மின் ஏல மையங்களுக்கும் பொருந்தும் என்பதால் தேயிலை தொழிலில் செயல் முதலீடு குறையும்.
அசாம் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில், 'பிரதான் மந்திரி சாஷ்ராமிக் யோஜனா' திட்டத்தின் கீழ், தேயிலை தொழிலாளர்கள் மற்றும் மகளிர் மற்றும் அவர்களின் குழந்தைகள் நலனுக்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தென் மாநில இடங்களில் அறிவிக்கப்படவில்லை. எனினும் தேயிலை தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த செயல்திட்டங்கள் நடைமுறை படுத்தி வருகின்றன. இவ்வாறு சஞ்சித் கூறினார்.