/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் மாவட்ட கிரிக்கெட்: இறுதி போட்டியில் கூடலுார் அணி
/
கோத்தகிரியில் மாவட்ட கிரிக்கெட்: இறுதி போட்டியில் கூடலுார் அணி
கோத்தகிரியில் மாவட்ட கிரிக்கெட்: இறுதி போட்டியில் கூடலுார் அணி
கோத்தகிரியில் மாவட்ட கிரிக்கெட்: இறுதி போட்டியில் கூடலுார் அணி
ADDED : ஜூன் 30, 2024 08:56 PM
கோத்தகிரி;மாவட்ட கிரிக்கெட் போட்டியில், கூடலுார் ரைசிங் ஸ்டார் அணி இறுதி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
கோத்தகிரி காந்தி மைதானத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அதில், இறுதி போட்டிக்கான, 35 ஓவர்கள் கொண்ட தகுதி போட்டியில், கூடலுார் ரைசிங் ஸ்டார் அணி, குன்னுார் ஸ்பார்டன் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ரைசிங் ஸ்டார் அணி, நிர்ணயிக்கப்பட்ட, 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 205 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர்கள் சஜின், 87ரன்கள், சரத், 39 ரன்கள் மற்றும் தினேஷ்குமார், 31 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய சார்லஸ், 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய குன்னுார் ஸ்பார்டன் அணி வீரர்கள், 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து, 175 ரன்கள் மட்டுமே எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். அதிகப்பட்சமாக, இமானுவேல் மற்றும் அருண் நாயர் இந்த அணிக்காக, தலா, 44 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், கூடலுார் ரைசிங் ஸ்டார் அணி, இறுதி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.