/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எட்டு ஊராட்சிகளில் வழிகாட்டி மதிப்பு உயர்வு
/
எட்டு ஊராட்சிகளில் வழிகாட்டி மதிப்பு உயர்வு
ADDED : ஜூலை 03, 2024 02:35 AM
அன்னுார்;தமிழகத்தில் நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்புகளை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த மாதம் வரைவு மதிப்புகள் வெளியிடப்பட்டன. பொதுமக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள் நேற்று அமலுக்கு வந்தன. அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லையில், இரண்டு பேரூராட்சிகள், 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில், 75 பத்திரங்களும், முகூர்த்த நாட்களில் 200 பத்திரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசு அறிவிப்பின்படி, எட்டு ஊராட்சிகளில் மட்டும் 10 சதவீதம் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. குப்பேபாளையம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், காரேகவுண்டம்பாளையம், கரியாம்பாளையம், குன்னத்துார் ஆகிய எட்டு ஊராட்சிகளில் மட்டும் முந்தைய மதிப்பிலிருந்து 10 சதவீதம் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'தற்போது எட்டு ஊராட்சிகளில் மட்டும் பத்து சதவீதம் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய பாதிப்பு இல்லை,' என்றனர்.