/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் நடக்கும் வாகன சோதனை: பணியில் குஜராத் சிறப்பு போலீசார்
/
எல்லையில் நடக்கும் வாகன சோதனை: பணியில் குஜராத் சிறப்பு போலீசார்
எல்லையில் நடக்கும் வாகன சோதனை: பணியில் குஜராத் சிறப்பு போலீசார்
எல்லையில் நடக்கும் வாகன சோதனை: பணியில் குஜராத் சிறப்பு போலீசார்
ADDED : ஏப் 08, 2024 11:39 PM

கூடலுார்:தமிழக -- கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில், தமிழக போலீசாருடன், குஜராத் சிறப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டு பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கூடலுார் சட்டசபை தொகுதியை ஒட்டிய, தமிழக - -கேரள, தமிழக - கர்நாடக எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
தமிழக - கர்நாடக எல்லையான முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில், கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில், தமிழக போலீசருடன், குஜராத்தை சேர்ந்த சிறப்பு போலீசார் துப்பாக்கி ஏந்தி சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள், கக்கனல்லா சோதனை சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. தமிழக போலீசாருக்கு உதவியாக நீலகிரிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள, குஜராத் சிறப்பு போலீசாரும் வாகன சோதனை பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம்,' என்றனர்.

