/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
/
சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
ADDED : ஆக 15, 2024 11:18 PM
குன்னுார்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குன்னுார் ஓட்டுபட்டறை குப்பை மேலாண்மை பூங்கா மையத்தில், 'கிளீன் குன்னுார் சார்பில் நடந்த விழாவில், துப்புரவு தொழிலாளர் வேணுகோபால் தேசிய கொடியேற்றினார்.
துப்புரவு தொழிலாளர்கள் ராமாயி, கமலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருவங்காடு, உதயம் நகர் சமத்துவ மக்கள் நல சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்க செயலாளர் ஜெயராமன் கொடியேற்றினார்.
மார்க்கெட் அருகே வி.பி., தெருவில், தன்னார்வலர் முபாரக் தலைமையில், துப்புரவு தொழிலாளர் சம்பத்தம்மாள் தேசிய கொடி ஏற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குமார் தேசியக்கொடி ஏற்றினார்.
உபதலை, ஆலோரை கிராமத்தில், 'ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப்' ஊர் பொதுமக்கள் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் ஏற்றினார்.
கோத்தகிரி
கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், கவுன்சிலர் தேவகி தேசிய கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஊர் பெரியவர் காரி உட்பட பலர் பங்கேற்றனர்.
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் மாதன் தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கோத்தகிரி பேட்லாடா கிராமத்தில் நடந்த விழாவில், ஊர் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊர் பிரமுகர்கள் பெள்ளி மற்றும் ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் பெரியவர் ஆரி தேசிய கொடியேற்றினார்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் ஜெயக்குமாரி கொடியேற்றினார். துணைத் தலைவர் உமாநாத், செயல் அலுவலர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் யுவராஜ், வனக்குமார், போக்குவரத்து எஸ்.ஐ., சிவக்குமார் உட்பட, போலீசார் பலர் பங்கேற்றனர்.
கூடலுார்
கூடலுார் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், நடந்த சுதந்திர தின விழாவில், சார்பு நீதிபதி முகமது அன்சாரி தேசிய கொடி ஏற்றினார். மாஜிஸ்திரேட் சசின்குமார், வக்கீல் சங்க தலைவர் சாக்கோ, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கொடிக்கு மரியாதை செலுத்தினர். வக்கீல் பரசுராமன் நன்றி கூறினார்.
முதுமலை, மசினகுடி கோட்டம் சிங்கார வனச்சரக அலுவலகத்தில் மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் தேசிய கொடி ஏற்றினார். வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர்.
மசினகுடி வனச்சரக அலுவலகத்தில் வனச்சகர் பாலாஜி தேசிய கொடியேற்றினார். சீகூர் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் தயானந்தன் தேசியக் கொடி ஏற்றினார்.
கூடலுார் வியாபாரி சங்க அலுவலகத்தில் நடந்த விழாவில், சங்க தலைவர் அப்துல் ரசாக் தேசியக்கொடி ஏற்றினார்.
கூடலூர புனித தாமஸ் ஆங்கில பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தேசியக் கொடி ஏற்றினார்.
பந்தலுார் அருகே கூவமூலா கிராமத்தில் ஊர் பெரியவர் பொன்னையா தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி தலைவர் சிவகாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் முனியப்பன், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.