தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பலத்த மழைக்கு மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழைக்கு மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழைக்கு மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 25, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழைால், கோவை சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. கெத்தையில் அதிகபட்சம், 6 செ.மீ. , மழை பதிவாகியுள்ளது. மழைக்கு மஞ்சூர்– கோவை சாலையில் எல்.ஜி.பி. ., அருகே , வளைவான பகுதியில், 15 அடி உயரத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

போக்குவரத்து தடைப்பட்டதால் கெத்தையில் இருந்து ஊட்டி செல்லும் அரசு பஸ் , கீழ்குந்தாவிலிருந்து கோவை சென்ற அரசு பஸ் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியில் நின்றன. நெடுஞ்சாலை துறையினர் சம்பவப் பகுதிக்கு வந்து மரங்களை ‘பவர் ஷா’ உதவியுடன் அறுத்து, சகதியை பொக்லைன் உதவியுடன் அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us