ADDED : மே 17, 2026 07:42 PM
கூடலூர்: -: கூடலூரில், மாலையில் பெய்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கூடலூர், பந்தலூர், முதுமலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக அப்போது மாலை நேரங்களில், கோடை மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. வனப்பகுதி வறட்சி நீங்கி பசுமைக்கு மாறி வருகிறது. நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஆனால், தொடரும் மழையினால் பாகற்காய் செடிகள் அழுகல் நோய் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று, காலை முதல் கூடலூர் பகுதியில் மந்தமான காலநிலை நிலவியது.
மாலை 4:00 மணிக்கு, இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடரும் கோடை மழையினால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து வருவது மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
