/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் கன மழை: மரங்கள் விழுந்து பாதிப்பு
/
குன்னுாரில் கன மழை: மரங்கள் விழுந்து பாதிப்பு
ADDED : மே 23, 2024 11:47 PM

குன்னுார்;குன்னுாரில் பெய்த கன மழையின் போது மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
குன்னுாரில் கடந்த 4, நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 7.6 செ.மீ., மழையளவு பதிவானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலை, அரசு பஸ் டிப்போ பணிமனை அருகில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மவுன்ட் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. எடப்பள்ளியில் விழுந்த ராட்சத மரங்களை தீயணைப்பு துறையினர் கொட்டும் மழையில் அகற்றினர்.
இதே போல், பாரஸ்ட்டேல், பாரத் நகர், ரேலியா டேம் சாலைகளில் மரங்கள் விழுந்தன. மாவட்ட நிர்வாக உத்தரவால் தீயணைப்பு துறையின் ஒரு வாகனம் பர்லியாரில் தீயணைப்பு வீரர்களுடன் நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து ரேலியா அணைக்கு, 35 கி.மீ., துாரம் வரை வந்து மரத்தை வெட்ட கால தாமதமானது.
வண்டிச்சோலையில் ஏற்பட்ட மண்சரிவில் காரின் டயர் சேற்றில் சிக்கியதை மீட்பு குழுவினர் மீட்டனர். பெட்போர்டு சாலை உட்பட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் போக்குவரத்து துவங்கியது.
கன மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீடு பகுதி சேதமடைந்ததை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். நேற்று காலை, 10:00 மணி வரை கன மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.