/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா சாலையில் கடும் வாகன நெரிசல்
/
தொட்டபெட்டா சாலையில் கடும் வாகன நெரிசல்
ADDED : மே 12, 2024 11:54 PM

ஊட்டி:ஊட்டி தொட்டபெட்டா சாலையில் நேற்று வாகன நெரிசல் ஏற்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஊட்டியில் கடந்த, 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கி, நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, ஊட்டி சேரிங்கிராஸ் - தொட்டபெட்டா சாலையில், மேல் கோடப்பமந்து பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் சுற்றுலா வாகனங்கள், அணிவகுத்து ஊர்ந்து சென்றதால், அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களில் வந்தவர்கள் நெரிசலில் சிக்கினர்.
அரசு பஸ்களில் பயணித்த பெரும்பாலான பயணிகள், மேல் கோடப்பமந்து பகுதியில், பஸ்சில் இருந்து இறங்கி, ஏ.டி.சி., வரை நடந்து சென்றனர். இப்பகுதியில் போதிய போலீசார் பணியில் இல்லை. இதனால், கடும் நெரிசல் ஏற்பட்டது. எனவே, வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.