/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆதரவற்றோர் இல்லத்தில் கல்வி, திருமணத்துக்கு உதவி
/
ஆதரவற்றோர் இல்லத்தில் கல்வி, திருமணத்துக்கு உதவி
ADDED : மே 05, 2024 11:41 PM

கூடலுார்:கூடலுார் தாலுகா முஸ்லிம் ஆதரவற்றோர் இல்லதில் நடந்த மகளிர் பார்வை நாள் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று உதவிகளை வழங்கினர்.
கூடலுார் கோழிக்கோடு சாலை செம்பாலாவில், கூடலுார் தாலுகா முஸ்லிம் ஆதரவற்றோர் இல்லம் (ஜி.டி.எம்.ஏ.,) செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவிட, ஆண்டுதோறும் ஏப்., அல்லது மே மாதத்தில் மகளிர் பார்வை நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இல்லத்தில், 73 குழந்தைகள் பராமரித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் நேற்று, மகளிர் பார்வை நாள் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கூடலுார், கேரளாவை சேர்ந்த ஆயிரக் கணக்கான பெண்கள் பங்கேற்று, பல குழந்தைகளின் பராமரிப்பு, கல்வி, திருமண உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இல்லத்தின் தலைவர் வாபு, செயலாளர் அப்துல் பாரி, நிர்வாக அதிகாரி சலாம் மற்றும் ஊழியர்கள், தன்னார்வர்கள் செய்திருந்தனர்.