/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கெத்தை சாலையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை அறிவுரை
/
கெத்தை சாலையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை அறிவுரை
கெத்தை சாலையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை அறிவுரை
கெத்தை சாலையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை அறிவுரை
ADDED : மே 28, 2024 11:58 PM
ஊட்டி:'கெத்தை சாலையில் யானை கூட்டம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்ய வேண்டாம்,' என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட கெத்தை வனத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வனத்தில் சுற்றித் திரியும் யானை கூட்டம் சில நேரங்களில், மஞ்சூர் -கோவை சாலையில், ஒக்கநாடு, கெத்தை, முள்ளி, பெரும்பள்ளம் சாலைகளில் உலா வருகிறது. அதில், கெத்தை, ஓணிக் கண்டி இடையே ஒக்கநாடு சாலையில், நேற்று முன்தினம் மாலை குட்டியுடன் யானை கூட்டம் உலா வந்தது.
சாலையில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு வந்த அரசு பஸ் யானை கூட்டத்தை பார்த்து அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, சாலையில் உலா வந்த யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வன ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் யானை கூட்டத்திற்கு எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம். என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.