ADDED : ஜூன் 25, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:நீலகிரியில் இந்து சாம்ராஜ்ய தினம் கொண்டாட்டப்பட்டது.
இந்து முன்னணி சார்பில், சத்ரபதி வீரசிவாஜி முடிசூட்டிய தினம் ஆண்டுதோறும் இந்து சாம்ராஜ்ய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி சார்பில், ஊட்டி, குன்னுார், கூடலுார், கோத்தகிரி, பந்தலுார் மற்றும் எமரால்டு ஆகிய பகுதிகளில், 200 இடங்களில், வீரசிவாஜி படம் வைத்து, இந்து முன்னணி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்டம், நகர, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் திரளானர் பங்கேற்றனர்.