சாலையில் சுற்றி திரியும் குதிரைகள் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம்
சாலையில் சுற்றி திரியும் குதிரைகள் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம்
ADDED : மே 14, 2026 08:03 PM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி அருகே, தலைக்குந்தா சாலையில் கூட்டமாக சுற்றிதிரியும் குதிரைகளால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திணறி வருகின்றனர்.
ஊட்டி நகரின் பெரும்பாலான பகுதிகளில் குதிரைகள், கால்நடைகள் கூட்டமாக சுற்றி திரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும், வாகனங்கள் செல்லவும் இடையூறு ஏற்படுகிறது.
தற்போது, கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலைக்குந்தா சாலையில் ஆங்காங்கே குதிரைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி இயற்கை காட்சிகளை ரசிக்கும் சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
