/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவமனை சாலை சேதம்; நாள்தோறும் நோயாளிகள் அவதி
/
மருத்துவமனை சாலை சேதம்; நாள்தோறும் நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 03, 2024 09:10 PM

கூடலுார் : 'மேல் கூடலுாரில் சேதமடைந்துள்ள அரசு மாவட்ட மருத்துவமனை சாலை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.
மேல்கூடலுார் பகுதியில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஊட்டி சாலையில் இருந்து மருத்துவமனைக்கு, 300 மீட்டர் துாரம் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, வாகனங்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில் சில இடங்களில் 'இன்டர்லாக்' மூலம் சாலை அமைத்துள்ளனர். இங்கு அவசர கால பிரிவு உள்ள கட்டடத்தை ஒட்டிய, 100 மீட்டர் துாரம் சாலை சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.
இப்பகுதியில் வாகனங்கள் இயக்கவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மருத்துவமனை சாலையில், சேதமடைந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும்.