/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூலூரில் குடியிருப்பு திறப்பு தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
/
சூலூரில் குடியிருப்பு திறப்பு தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
சூலூரில் குடியிருப்பு திறப்பு தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
சூலூரில் குடியிருப்பு திறப்பு தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 13, 2024 11:40 PM

சூலுார்:சூலுார் பேரூராட்சியில் குடியிருப்பு திறக்கப்பட்டு, வீடுகள் ஒப்படைக்கப்பட்டதால், துாய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூலுார் பேரூராட்சி அங்காளம்மன் கோவில் வீதியில், துாய்மை பணியாளர்களின் குடியிருப்பு இருந்தது. 24 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பு, கட்டி, 30 ஆண்டுகள் ஆனதால், பழுதானது. புதுப்பித்து தர துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மூலதன மானிய நிதியில் இருந்து, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்தன.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.
ஒவ்வொரு வீடும், 550 சதுர அடி கொண்டது. வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை மற்றும் கழிப்பிடத்துடன் கூடிய குளியலறை உள்ளது.
குடியிருப்பு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், செயல் அலுவலர் சரவணன், கண்ணம்பாளையம் செயல் அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர், பயனாளிகள், 24 பேருக்கு, வீட்டின் சாவிகளை வழங்கினர்.
எம்.எல்.ஏ., கந்தசாமி, நகர செயலாளர் கார்த்திகை வேலன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.