/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் எப்படி? மிசோரம் அதிகாரிகள் கள ஆய்வு
/
கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் எப்படி? மிசோரம் அதிகாரிகள் கள ஆய்வு
கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் எப்படி? மிசோரம் அதிகாரிகள் கள ஆய்வு
கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் எப்படி? மிசோரம் அதிகாரிகள் கள ஆய்வு
ADDED : ஆக 25, 2024 01:35 AM

ஊட்டி;நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள மிசோரம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மிசோரம் மாநில தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலர் ராம்தின்லைனி தலைமையில், அம்மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் லாலியான் சுவாலா, ராபர்ட் லால்ரின்சங்கா,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் வான்ஸ்லுபுயா, தோட்டக்கலை துறை மார்க்கெட்டிங் பிரிவு உதவி இயக்குனர் ஜூலி, நில வளங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு துறை உதவி இயக்குனர் லால் ரெம்ருதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உதவி இயக்குனர் ரொனால்ட் லால்ச்சு அனாவ்மா உள்ளிட்ட அதிகாரிகள் ஊட்டி மார்க்கெட்டில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் காய்கறி சில்லரை மற்றும் ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டனர். அங்கு, விவசாயிகள் கொண்டு வரும் மலை காய்கறிகளை ஏலம் விடுவது குறித்து கள ஆய்வு மூலம் தெரிந்துகொண்டனர்.
பின், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் முத்துகுமார் ஆகியோர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்கள்.
நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில், ''மிசோரம்மில், உள்ள கூட்டுறவு சங்கத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை கள ஆய்வு மூலம் விபரங்களை சேகரித்து அங்கு செயல்படுத்த திட்டமிட்டு, சிறந்த சங்கமாக நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் பற்றி தெரிந்துகொண்டு, மிசோரம் அதிகாரிகள் ஊட்டிக்கு வந்தனர். நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி, மேட்டுப்பாளையம் விற்பனை சங்கங்களை பார்வையிட்டு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டனர்.'' என்றார்.