/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துண்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; ஊட்டி அருகே கணவன் கைது
/
துண்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; ஊட்டி அருகே கணவன் கைது
துண்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; ஊட்டி அருகே கணவன் கைது
துண்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; ஊட்டி அருகே கணவன் கைது
ADDED : மே 10, 2024 01:42 AM

ஊட்டி;ஊட்டியில், துண்டால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அருகே ஏக்குணி பகுதியை சேர்ந்த மாணிக்கம், 60, இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றார்.
பின், பங்கஜம் என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. மாணிக்கம் அப்பகுதியில் உள்ள தனியார் தைலம் காய்ச்சும் செட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வேதனை அடைந்த பங்கஜம் குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின், மாணிக்கம் அவரை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் மனைவி கணவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி தலையை தரையில் அடித்ததில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாணிக்கம் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானார்.
வீட்டில் மற்றொரு அறையில் இருந்த உறங்கி கொண்டிருந்த மகள் அம்மாவை தேடியபோது சமையல் அறையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, புதுமந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் அல்லி ராணி, எஸ்.ஐ., ஆனந்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணிக்கம் அருகில் இருந்த தைல செட்டில் பதுங்கி இருந்ததை கண்டு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.