/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை
/
விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை
ADDED : மே 23, 2024 11:36 PM
கூடலுார்;கூடலுார் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த மகேஷ்வரன்,46. இவர் மனைவி சசிகலா. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர். மேலும், 'மகேஸ்வரன், மனைவி சசிகலாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்,' என, கூடலுார் நீதிபதி, 2018 மே 26ல் உத்தரவிட்டார்.
அப்போது, வெளியே வந்த மகேஸ்வரன், 'எதற்கு ஜீவனாம்சம் தர வேண்டும்,' என, கூறி கோர்ட் வாசலிலேயே சசிகலாவை செருப்பால் தாக்கியுள்ளார். கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர்.
வழக்கு, கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளி மகேஷ்வரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.