sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்...! முருகன் உறுதி

/

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்...! முருகன் உறுதி

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்...! முருகன் உறுதி

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்...! முருகன் உறுதி

1


UPDATED : ஏப் 17, 2024 07:30 AM

ADDED : ஏப் 17, 2024 12:55 AM

Google News

UPDATED : ஏப் 17, 2024 07:30 AM ADDED : ஏப் 17, 2024 12:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;தாமரையின் மலர்ச்சி; நீலகிரியின் வளர்ச்சி, என்ற பெயரில், '59 வாக்குறுதிகளை, 500 நாட்களில் நிறைவேற்றுவேன்,' என்ற உறுதியுடன், நீலகிரி லோக்சபா தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை தொகுதியின் வேட்பாளர் முருகன் ஊட்டியில் வெளியிட்டார்.

அதன் முழுமையான சாராம்சம் இதோ...!

உட்கட்டமைப்பு வசதிகள்


n ஊட்டியில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உருவாக்கப்படும். இதன் மூலம், தொழில்துறையில் முன்னேற்றம் அடைவதுடன், அரசு மற்றும் கல்வி ஆகியவற்றின் பிணைப்பு வலுப்படுத்தப்படும்.

n நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி, உலகத் தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

n ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.

n ஊட்டி காந்தள் பகுதியில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.

n நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக, எச்.பி.எப்., தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக அமைத்து தரப்படும்.

nநீலகிரியில் மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் குடிநீர் வழங்க 'ஜல்ஜீவன்' திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

n மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு, வெளிவட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும். அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்படும்.

n ஊட்டி நகர் பகுதியில் சுற்றுலா வரும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான, 'மல்டி லெவல்' பார்க்கிங் தளம் அமைக்கப்படும்.

விவசாய மேம்பாடு


n அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இத்திட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு குளிர்பதன கிடங்குகள் அமைத்து தரப்படும்.

n நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு தேயிலை விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.

n நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் சாகுபடி செய்யப்படும். நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்றப்படும்.

n நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் பாண்டியர் --புன்னம்புழா, பவானி ஆற்றுடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

இளைஞர்கள் நலனுக்கு முக்கியத்துவம்


n நீலகிரியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

n தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி, வழிகாட்டுதல்கள், கடன்/முதலீட்டு உதவி வழங்கும் 'ஸ்டார்ட் அப் இந்தியா' கிளை மையம் அமைக்கப்படும்.

n மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அவிநாசி பகுதியில் ஜவுளி சந்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் நலன் மகளிருக்கான அரசு கலைக் கல்லுாரி கொண்டு வரப்படும்.

n மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வு மேம்பட ஆவன செய்யப்படும். கிராமப்புற பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குறைந்த விலையில் 'சானிட்டரி நாப்கின்கள்' வழங்குவதற்கு உறுதி செய்யப்படும்.

எளியோர் நலன் பாதுகாப்பு


n படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

n குடிசை வீடுகளில் குடியிருந்து வரும் நபர்களுக்கு 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம் புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

n நீலகிரி தொகுதிக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்படும் விதமாக 'நவோதயா பள்ளிகள்' அமைத்து தரப்படும்.

n பவானிசாகர் மற்றும் சிறுமுகை பகுதி மீனவர்கள் அனைவருக்கும் 'ஆவாஸ் யோஜனா' வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும்.

n மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில், 24 மணி நேர தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு அமைத்து தரப்படும். அவிநாசி அரசு மருத்துவமனைக்கு, 24 மணி நேர தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

n நீலகிரியில் வன-விலங்கு மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். மேலும், இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும். கூடலுார் மக்களின் செக்ஷன்- 17 பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

nநீலகிரியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 'ெஹலி ஆம்புலன்ஸ்' என்கிற மத்திய சுற்றுலாத்துறை அலுவலகத்தை ஊட்டியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us