/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றினால் வெள்ளம் தேங்காது
/
கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றினால் வெள்ளம் தேங்காது
கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றினால் வெள்ளம் தேங்காது
கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றினால் வெள்ளம் தேங்காது
ADDED : ஏப் 11, 2024 07:13 AM

பந்தலுார் : பந்தலுார் பஜாரில், மழை மற்றும் கழிவுநீர் ஓட ஏதுவாக, 6 இடங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது அந்த இடங்களில், கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், கழிவு நீர் செல்ல வழி இல்லாததுடன், மழை காலங்களில் மழை நீர் சாலையில் வழிந்து ஓடி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐந்து இடங் களில் அடைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு பதில், ஒரு இடத்தில் மட்டும் சாலையின் குறுக்காக நெடுஞ்சாலை துறை மூலம், கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மைதானத்தை ஒட்டி செல்லும் பெரிய அளவிலான கழிவு நீர் கால்வாயில், பஜார் பகுதியில் இருந்து கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல வசதி உள்ளது. இருந்த கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது, அதில் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
இதனால், தற்போது அமைக்கப்படும் கால்வாயில் இருந்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் அமைத்தும் பயன் இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை, நகராட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் மற்றும் மழை நீர் வழிந்தோட வழிவகை செய்ய வேண்டும்.

