/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆவணத்துடன் விண்ணப்பித்தால் தான் தீர்வு மக்களுடன் முதல்வர் முகாமில் தகவல்

ADDED : ஆக 10, 2024 02:34 AM
அன்னுார்;கணேசபுரத்தில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமில், 473 மனுக்கள் பெறப்பட்டன.
ஊராட்சி பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில், பெறப்படும் மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்றுமுன்தினம் கணேசபுரத்தில், நடந்த முகாமில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பேபாளையம், காட்டம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் வருவாய் துறையிடம் 221 மனுக்களும், சுகாதாரத்துறையிடம் 124 மனுக்களும், கால்நடை பராமரிப்புத் துறைக்கு 42 மனுக்களும், கூட்டுறவுத் துறையில் 19 மனுக்களும் உள்பட 473 மனுக்கள் பெறப்பட்டன.
தாட்கோ மேலாளர் மகேஸ்வரி பேசுகையில், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விரைவில் தீர்வு கிடைக்கும், என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் பிந்து பேசுகையில், வேளாண்துறை சார்பில் தரிசு நில மேம்பாட்டு திட்டம், மானிய விலையில் திரவு உயிரி உரம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது, என்றார்.
முகாமில் சுகாதாரம், ஆதிதிராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், தொழிலாளர் துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.