/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முடிஞ்சா மோதிப்பாருங்கள் தில்லாக நின்ற காட்டெருமை; அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்

ADDED : ஆக 20, 2024 10:11 PM

ஊட்டி : ஊட்டி ரிச்சிங் காலனி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பகலில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் குடியிருப்பு வாசிகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் பகல் நேரத்தில் சாலையில் செல்வதும், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் தொடர்கிறது.
இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ேஹாபார்ட் குடியிருப்பு பகுதி, ரிச்சிங் காலனி, காந்தி நகர் பகுதிகளில், இரண்டு காட்டெருமைகள் நாள்தோறும் காலையில் வந்து மாலை வரை சுற்றித்திரிகின்றன. இதனால், காலையில் பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள், நடமாட முடியாமல் அச்சப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வன ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விரட்டினாலும், மீண்டும் அதே பகுதிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
மக்கள் கூறுகையில், 'நாள்தோறும் வரும் காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படும் முன், குடியிருப்புக்கு வரும் வழியை அடைக்க வேண்டும்,' என்றனர்.