/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லோக்சபா தேர்தலில் சீரிய பணி போலீசாருக்கு ஐ.ஜி., வெகுமதி
/
லோக்சபா தேர்தலில் சீரிய பணி போலீசாருக்கு ஐ.ஜி., வெகுமதி
லோக்சபா தேர்தலில் சீரிய பணி போலீசாருக்கு ஐ.ஜி., வெகுமதி
லோக்சபா தேர்தலில் சீரிய பணி போலீசாருக்கு ஐ.ஜி., வெகுமதி
ADDED : ஏப் 27, 2024 12:39 AM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தேர்தல் நேரத்தில், சீரிய முறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வெகுமதி வழங்கப்பட்டது.
மாநிலத்தில் லோக்சபா தேர்தல், ஒரே கட்டமாக கடந்த, 19ம் தேதி நடந்து முடிந்தது. நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில், பறக்கும் படை குழு, ஓட்டுச்சாவடி பாதுகாப்பு, பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் கொண்டு செல்வது, பதிவான ஓட்டு பெட்டிகளை 'ஸ்ட்ராங் ரூமில்' வைப்பது உள்ளிட்ட, தேர்தல் சம்பந்தமான பணிகளில் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில், சீரிய முறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பணியை பாராட்டி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, ஊட்டியில் நடந்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, எஸ்.பி., சுந்தரவடிவேல் முன்னிலையில், போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

