நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு'கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா ஆனகல்லை சேர்ந்தவர் குரியாக்கோஸ், 54, பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை வேலைக்கு பைக்கில் சென்றபோது, அகமலவாரம் அயப்பன்பொற்றை என்ற இடத்தில், பாலக்காட்டில் இருந்து வலியகாடு செல்லும் அரசு பஸ் எதிரில் வந்தது.
வேகமாக வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், குரியாக்கோஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மலம்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

