/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் குழாய் உடைப்பு உடனடியாக சீரமைப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பு உடனடியாக சீரமைப்பு
ADDED : செப் 17, 2024 09:58 PM

கூடலுார் : கூடலுார் மார்த்தோமா நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு குறித்து வெளியான செய்தியை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர்.
கூடலுார் மார்த்தோமா நகர் அருகே, ஏழுமுறம் கிராமத்துக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்லும் பகுதியில், நகராட்சி குழாயில் நேற்று முன்தினம், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் முனியப்பன் உத்தரவுபடி, நகராட்சி குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைத்தனர்.