/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயணிகள் காத்து நிற்கும் பகுதியில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதால் பாதிப்பு

ADDED : ஏப் 22, 2024 01:36 AM

கூடலுார்:கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பயணிகள் நிற்கும் பகுதியை, பைக் நிறுத்த பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஓவேலி பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், விநாயகர் கோவில் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், பயணிகள் சாலைகளில் காத்துநின்று பஸ்களில் ஏற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.