/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகரந்த சேர்க்கையில் தேனீக்களுக்கு முக்கிய பங்கு கூடலுாரில் நடந்த கருத்தரங்கில் தகவல்

ADDED : ஆக 09, 2024 01:45 AM

கூடலுார்;கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை; தேனி வளர்ப்பு இயக்கம் சார்பில் தேனி வளர்ப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்றார். துணை இயக்குனர் அம்ரோஸ்பேகம் தலைமை வகித்தார்.
ஊட்டி வேளாண் அறிவியல் நிலையம் பூச்சிகள் துறை இணை பேராசிரியர் வினோத்குமார் பேசுகையில், ''தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் அயல் மகரந்த சேர்க்கைக்கும், சுற்றுச்சூழல் கணிப்பு குறித்து அறிய முக்கிய பங்காற்றி வருகின்றன. தேனீ வளர்க்க, விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்,'' என்றார்.
தொடந்து, பயிற்றுனர் ஆனந்த், உயர் தொழில்நுட்பத்தில் தேனீ வளர்ப்பு குறித்தும்; முன்னோடி தேனி வளர்ப்பு விவசாயி சசிதரன், தேனீ வளர்ப்பில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்தும்; பயிற்றுனர் ஜெயப்பிரகாஷ், தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு' குறித்தும் விளக்கினர். தேனி வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கருத்தரங்கில், ஊட்டி மண் பரிசோதனை நிலைய துணை இயக்குனர் (பொ.,) அனிதா, கூடலுார் தோட்டக்கலை அலுவலர்கள் தயானந்தன், பிரியங்கா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், வினோத், சக்திவேல், பிரபாகரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.