/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முறையாக பொருத்தாத குழாய்: வீணாகும் குடிநீர்
/
முறையாக பொருத்தாத குழாய்: வீணாகும் குடிநீர்
ADDED : மார் 05, 2025 10:12 PM

ஊட்டி; ஊட்டி கோடப்பமந்து பகுதியில் குழாய்கள் முறையாக பொருத்தாததால், தண்ணீர் வீணாகி வருகிறது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு மார்லிமந்து, பார்சன்ஸ் வேலி மற்றும் கோடப்பமந்து உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி கோடப்பமந்து சாலையோரத்தில் உள்ள நீர் தேக்கத்தில் இருந்து, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் குழாய்கள் சேதமாகி உள்ளன. குழாய்கள் துருப்பிடித்து சரிவர பொருத்தாத குழாய்களில் இருந்து அடிக்கடி தண்ணீர் வீணாகி வருகிறது.
தற்காலிகமாக, பிளாஸ்டிக் மற்றும் துணிகள் கொண்டு, நகராட்சி ஊழியர்கள் கட்டினாலும், தண்ணீர் வீணாவதை தடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம், சேதமான குழாய்களை மாற்றி, புதிய குழாய்களை பொருத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.