/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் வரத்து விற்பனை குறைவு: ஒரே வாரத்தில் ரூ. 1. 69 கோடி சரிவு

ADDED : மே 19, 2024 11:22 PM
குன்னுார்;குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், வரத்து மற்றும் விற்பனையில் சரிவை சந்தித்ததால், ஒரே வாரத்தில், 1.69 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 20வது ஏலத்தில், '8.38 லட்சம் கிலோ இலை ரகம்; 2.62 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 11 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
அதில், '8.22 லட்சம் கிலோ இலை ரகம்; 2.51 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 10.72 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 10.72 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவுக்கு, 98.49 ரூபாயாக இருந்தது. கிலோவுக்கு ஒரு ரூபாய் வரை ஏற்றம் கண்டது.
கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 2.3 லட்சம் கிலோ தேயிலை துாள் வரத்து குறைந்ததுடன், 1.86 லட்சம் கிலோ விற்பனையும் சரிந்தது. 97.43 சதவீதம் தேயிலை துாள் விற்ற போதும், ஒரே வாரத்தில், 1.25 கோடி ரூபாய் மொத்த வருமானமும் சரிந்தது.
வரும் வாரங்களில் தேயிலை துாளின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் ஏற்றம் கண்டு, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.