/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடுதலாக இலவச பஸ்களை இயக்க பெண்கள் கோரிக்கை
/
கூடுதலாக இலவச பஸ்களை இயக்க பெண்கள் கோரிக்கை
ADDED : மே 10, 2024 11:28 PM
கூடலுார்;நீலகிரியில், மகளிருக்கான இலவச பஸ் திட்டத்தில், கூடலுார் பகுதியில், கூடுதல் வழித்தடங்களில் இலவச பஸ் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், பிப்., முதல், மகளிருக்கான இலவச பஸ் திட்டத்தை துவக்கப்பட்டது. இத்திட்டம், 100 பஸ்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், 'கூடலுார்- ஓவேலி பகுதிக்கு ஐந்து பஸ்கள், மாயார் ஒன்று, கூடலுாரில் 2 பஸ்கள்,' என, 8 பஸ்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.ஆனால், முக்கிய வழித்தடமான, தேவர்சாலை சாலையில் இயக்கப்படும் பல பஸ்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இப்பகுதியை மகளி கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், '35 கி.மீ., துாரம் வரை இயக்கப்படும், பஸ்களுக்கு மட்டுமே, திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு, தேவர்சோலை சாலை வழியாக, நீண்ட துாரம் இயக்கப்படும் பஸ்களில் இத்திட்டம் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது,' என்றனர்.