/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் துவக்கம்
/
தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் துவக்கம்
தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் துவக்கம்
தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : மே 09, 2024 05:11 AM

குன்னுார் : நீலகிரியில் ஆண்டு தோறும் நடக்கும் தேசிய என்.சி.சி., மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரி, ஊட்டி சி.எஸ்.ஐ., பள்ளி, நஞ்சநாடு ஏகலைவா பள்ளிகளில் ஆண்டு தோறும் மே மாதம், 3 பிரிவுகளாக தேசிய என்.சி.சி., முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம், 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரியில் துவங்கிய முகாமை கோவை, என் சி.சி., கமாண்டிங் அதிகாரி கர்னல் சிவாராவ் துவக்கி வைத்தார்.
இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு, கோவா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1050 மாணவியர் பங்கேற்கின்றனர்.
முத்தொரை வானொலி ஆராய்ச்சி மையம், ரோஜா பூங்கா, பட்டுபண்ணை, எம்.ஆர்.சி., மியூசியம் சிம்ஸ் பார்க் உட்பட பழங்குடியின கிராமங்களில், மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய உள்ளனர். 2வது குழுவினர் வரும், 16ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
ஏற்பாடுகளை, கோவை என்.சி.சி., தலைமையக கமாண்டர் கர்னல் சிவராவ் தலைமையில் என்.சி.சி., குழுமத்தினர் செய்து வருகின்றனர்.