/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி--குன்னுார் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு
/
ஊட்டி--குன்னுார் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : ஜூன் 05, 2024 08:20 PM
குன்னூர் : ஊட்டி- குன்னுார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
குன்னுார் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், அருவங்காடு உட்பட பல இடங்களிலும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சாலைகளில் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் ஓட்டுவதற்கு டிரைவர்கள் திணறுகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அருவங்காடு கோபாலபுரம் அருகே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ள நிலையில், காரின் பின் பகுதியில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் பலியானார்.
டிரைவர்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.